புற்றுநோய்க்கான சிறந்த மருந்து தூக்கம்! ஆய்வில் வெளியான முக்கிய தகவல்
உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பரவி வரும் நோய்களில் ஒன்றாக தற்போது புற்றுநோய் (Cancer) பதிவாகியுள்ளது.
சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான தூக்கமின்மை புற்றுநோய் ஏற்படுதற்கான முதன்மையான காரணியாக அமைந்துள்ளதென அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மை
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் குறைவாக தூங்குகிறார்கள்.
போதுமான தூக்கமின்மை காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பகல் நேர தூக்கத்தை தவிர்த்து நாளொன்றுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாக இரவு தூங்கும் நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
மெலடோனின்
இந்த புற்றுநோயைக் கட்டுப்படுத்த தூக்கம் என்பது முக்கிய காரணி ஆகும். மெலடோனின் என்பது பினியல் சுரப்பி மூலம் மூளைக்கு வெளியிடப்படும் ஹார்மோன் ஆகும்.
அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்க, மக்கள் அதை இயற்கையான அல்லது செயற்கையான துணைப் பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
உடலில், மெலடோனின் பல செயல்பாடுகளைச் செய்கிறது. ஆனால் இது முக்கியமாக சர்க்காடியன் தாளங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் எதிர்ப்பு ஹார்மோன்
சர்க்காடியன் ரிதம் என்பது உடலின் உள் கடிகாரம். எப்போது தூங்க வேண்டும், எப்போது எழுந்திருக்க வேண்டும் என்பதை இது உடலுக்கு அறிவுறுத்துகிறது. இது புற்றுநோய் எதிர்ப்பு ஹார்மோன் கூட ஆகும்.
இரவு உறங்க செல்ல உகந்த நேரம் இரவு 10 - 11 மணி வரை என நிபுணர்கள் கருதுகிறார்கள். இரவு நேரத்துடன் தூங்கி காலை சூரிய உதயத்தின் போது சீக்கிரமே எழுவது உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதமை சீராக்க வைக்க உதவி, ஆரோக்கியமான தூக்கம், விழிப்பு சுழற்சியை உறுதி செய்கிறது.
இது புற்றுநோயிலிருந்து மட்டுமல்லாது ஏனைய நோய்களிலிருந்தும் உடலை காக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |