வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறையாகவும் தோற்கடிப்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாம் முறையாக இன்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்கிழமை தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.
அதன் போது கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன் வைக்கப்பட்ட போதும் அதுவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.
அதனை அடுத்து புதிய தவிசாளராக என். செல்வேந்திரா கடந்த செப்டெம்பர் மாதம் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அவரால் முன் வைக்கப்பட்ட இரு வரவு செலவுத் திட்டமும் தோல்வியடைந்துள்ளது.