உக்ரைனுக்காக அமெரிக்கா, நேட்டோ தயாரித்த இரகசிய யுத்த ஆவணக் கசிவு - உக்ரைன் பதில்!
உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட இரகசிய யுத்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.
குறித்த ஆவணங்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து தயாரித்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்ட குறித்த தற்காப்புத் திட்டம் ரஷ்ய உளவுத் துறையால் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தரப்பு
ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கும், உக்ரைனிய இராணுவத்தை தயார்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கிய ஆவணங்களே கசியவிடப்பட்டிருந்தது.
குறித்த ஆவணங்களில் உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, யுத்த களத்தில் எடுக்கப்பட்ட நேரடி புகைப்படங்கள் மற்றும் உக்ரைனின் தாக்குதல் திட்டங்கள் போன்றவை உள்ளடங்கி இருந்தது.
இந்தநிலையில், இந்த ஆவணங்கள் ரஷ்யாவின் உளவுத் துறையால் தயாரிக்கப்பட்ட போலியான ஆவணங்கள் என உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.
