காணி விடுவிப்பு தொடர்பில் வட மாகாண ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை!
Kamal Gunaratne
Northern Province of Sri Lanka
P. S. M. Charles
By Laksi
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (5) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
காணி விடுவிப்பு
இதன்போது, வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஆளுநரால் பாதுகாப்புச் செயலாளருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண ஆளுநரிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்