புகையிரத சேவைகளில் தாமதம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் இரவு நேர அஞ்சல் புகையிரதத்தை எல்ல நிலையத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல - தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையிலான புகையிரத தண்டவாளத்தில் இன்று (10) மாலை மண்மேடு சரிந்து விழுந்து புகையிரத போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமையினாலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பதுளை நோக்கி இயக்கப்படும் பொடி மெனிகே புகையிரதம் எல்ல வரையில் மட்டும் சென்று எல்ல நிலையத்தில் இருந்து திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புகையிரத போக்குவரத்து தடை
மேலும், நாவலப்பிட்டி புகையிரத பாதையில் நானுஓயா நிலையத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும், எனவே அந்த இடத்தில் உள்ள தடைகளை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராகம மற்றும் வல்பொல நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஆகையால், பிரதான புகையிரத பாதை பயணிக்கும் புகையிரதங்கள் தாமதமாக புறப்படும் என அந்நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |