சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று(21) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, “10,000க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். தாமதத்தை ஏற்றுக்கொள்கிறோம்.அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
அத்தோடு, வரும் ஆண்டில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மோசடி மற்றும் ஊழலற்றதாக இருப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த திட்டத்தை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக முடியாமல் போனதை, செய்ய, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உரிய ஒப்புதல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம், மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |