பசில் ராஜபக்சவிடம் எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் இன்று கடிதம் மூலம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறும் இல்லை என்றால், எரிபொருளுக்கு அறவிடப்படும் வரிகளை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ள விலை திருத்தங்களை செய்தால், அது வரலாற்றில் மிகப் பெரிய விலை அதிகரிப்பாக இருக்கும்.
இதனால், நுகர்வோரை அவதிக்கு உள்ளாகும் வகையிலான விலை அதிகரிப்பை மேற்கொள்ள தயாரில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கி வரும் நஷ்டத்திற்கு மத்தியில், எரிபொருள் விலை அதிகரிப்படுவது ஒரு நாள் தாமதமானாலும் அது கூட்டுத்தாபனத்தால், தாங்க முடியாத நஷ்டமாக இருக்கும் என கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் கூறுகின்றன.
