இந்தியாவை அதிரவைத்த டெல்லி குண்டு வெடிப்பு : மற்றுமொரு பெண் மருத்துவர் கைது
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் கார் குண்டுவெடிப்பை அடுத்து காஷ்மீர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பல மருத்துவர்களுக்கு தொடர்பு
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பல மருத்துவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பெண் மருத்துவர் ஷாயின் சையத் மற்றும் இரண்டு மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.
பெண் மருத்துவர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் பிரியங்கா ஷர்மாவை பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரியானாவைச் சேர்ந்த இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இதேவேளை, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்