போக்குவரத்திற்கு தடையேற்படுத்தும் கிரவலை அகற்ற மக்கள் கோரிக்கை!
திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காக்காமுனை வட்டாரம் 6 பகுதியில் வீதி அபிவிருத்தி செய்வதற்காக கொட்டப்பட்ட கிரவல்களினால் போக்குவரத்து தடைப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் கிரவல் கொட்டப்பட்டு ஒரு கிழமையை தாண்டியுள்ள நிலையில் இது வரையில் செப்பனிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதன் ஊடாக போக்குவரத்து செய்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பகுதி ஊடான நடமாடும் வியாபாரிகள் அவ்வீதியை விட்டு மாற்று வீதிக்கு செல்வதனால் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் கட்டிட வேலைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு சேர்க்க முடியாமை பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அரச அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

