தயாசிறிக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குமாறு கோரிக்கை!
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்.
இந்நிலையில் கட்சியின் தலைவர் மைத்திரி பால சிறிசேன,கட்சியின் தவிசாளர், செயலாளர் ,தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளைத்தவிர வேறு பதவிகளை தயாசிறி ஜயசேகரவிற்கு வழங்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட உப தலைவர் பதவி
இதனை தொடர்ந்தே சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியிலிருந்து விலக போவதில்லை என தெரிவித்திருந்த தயாசிறி ஜயசேகர தற்போது வெளிநாட்டில் உள்ளார்.
அவர் நாடு திரும்பிய பின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.