இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான “டெல்டா” வைரஸ்! கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்?
தெமட்டகொட பகுதியில் உள்ளவர்களிடையே அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸால் அந்த பகுதிக்கு வெளியே வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் மத்திய செயற்குழு இன்று (18) சுகாதார அமைச்சகத்தில் ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின் பல தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
இதன்படி, குறித்த பகுதிகளை தனிமைப்படுத்தி, டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க மாதிரிகளை எடுத்துக் கொள்ளுதல்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணித்து ஆய்வு செய்தல். இந்த டெல்டா விகாரங்கள் நாட்டின் பிற பகுதிகளில் அதிகமாக உள்ளதா என்பதை சோதனை செய்ய சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனைகளுக்குத் தேவையான அனைத்து பௌதீக மற்றும் மனித வளங்களையும் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.