யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம்

Sri Lankan Tamils Jaffna SL Protest
By Sumithiran Oct 07, 2025 05:48 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அசமந்தப் போக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்வரை சென்றது. பின்னர் பிரதேச செயலக பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பழமையான கட்டடங்கள் இடித்தழிக்கப்பட்டன

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் தொன்மையும், புதுமையும் வாய்ந்த ஒரு ஆலயம். ஆலய நிர்வாகத்தின் குறுகிய சிந்தனையுடன் 48 கோடி ரூபாய் நிதியில் ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம் | Demolition Ancient Building Suthumalai Amman

 அந்தப் புனரமைப்பு பணிகளுக்காக எனக் கூறி எமது மூதாதையர்கள் அமைத்த பழமையான கட்டடங்கள் இடித்தழிக்கப்பட்டன. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. புனர் நிர்மாணத்தை நாங்கள் தடுக்கவில்லை தேவையான விடயத்தை புனர்நிர்மாணம் செய்துவிட்டு ஆலயத்தின் பழமையை பேணிப் பாதுகாக்க வேண்டும். ஆலயத்தில் பழமையே எமது இருப்பினையும் எடுத்துக்காட்டும்.

போலி ஆவணங்களை தயாரித்து, அதன் மூலப் பிரதிகள் இல்லாமல் பிரதிகளை பிரதேச செயலரிடம் ஒப்படைத்த நிலையில் அடிப்படையில் பிரதேச செயலகமும் அதற்கு அனுமதி வழங்கியதால் அந்த பழமையான கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.

 நாங்கள் இரவு பகலாக இந்த ஆலயத்தில் நின்று தொண்டு செய்த அடியவர்கள். இந்த கட்டடம் இடித்தழிக்கப்பட்ட பின்னர் எவரும் ஆலயத்திற்கு தற்போது வருவதில்லை. 70-80 இளைஞர்கள் இந்த ஆலயத்தில் தொண்டு செய்து வந்தார்கள். ஆனால் தற்போது யாரும் செல்லாத நிலையில் வாடகைக்கு இயந்திரங்களை வேலைக்கு அமர்த்தி ஆலயத்தின் வாகனங்களை அகற்றுகின்றனர்.

கட்டடத்தை இடிப்பதற்கு அனுமதி வழங்கிய பிரதேச செயலகம்

கட்டட நிர்மாணத்திற்காக ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கின்றனர். ஆனால் ஊர் மக்களிடம் அபிப்பிராயம் கேட்பதில்லை. நிர்வாகத்திற்குள் உள்ளவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படுகின்றார்கள். படித்தவர்கள் நிர்வாகத்திற்குள் இருந்து கொண்டு பாமர மக்களை ஏமாற்றுகின்றனர்.

யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம் | Demolition Ancient Building Suthumalai Amman

திருவிழா காலங்களில் பட்டோலை வழங்கப்படுவது வழமை. அதற்கு ஆலய நிர்வாகத்தினரால் கையொப்பங்களும் பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட கையொப்பங்களை ஸ்கான் செய்து கட்டடத்தை இடிப்பதற்கு ஊர் மக்கள் கையொப்பமிட்டதாக பிரதேச செயலகத்துக்கு வழங்கினார்கள். அதன் மூலப் பிரதியை பார்க்காமல் பிரதேச செயலகமும் கட்டடத்தை இடிப்பதற்கு அனுமதி வழங்கியது.

பழைய கட்டடத்தை இடிக்கக் கூடாது என நாங்கள் ஏற்கனவே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் எம்மை கூப்பிட்டு விசாரணை செய்யாமல் இந்த போலியான கடிதத்திற்கு அனுமதி வழங்கியது தவறு.

பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட உதவி பிரதேச செயலர்

அத்துடன் கட்டடத்தை இடிப்பதற்கான அனுமதி கடிதத்தை பிரதேச செயலகம் வழங்கும் போது முறைப்பாட்டாளருக்கும் வழங்க வேண்டும், ஆலய நிர்வாகத்தினருக்கும் வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆலய நிர்வாகத்தினருக்கு மாத்திரமே வழங்கினர். முறைப்பாட்டாளராகிய எமக்கு ஏன் அனுமதி கடிதம் தரப்படவில்லை என நாங்கள் உதவி பிரதேச செயலரிடம் கேட்டபோது அவர் மறந்துவிட்டதாக பொறுப்பற்ற வகையில் கூறினார்.

யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம் | Demolition Ancient Building Suthumalai Amman

பிரதேச செயலகத்திடம் நாங்கள் முறைப்பாடு செய்த போது தமக்கு வேலை சுமை இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் எம்மை ஒவ்வொரு இடங்களுக்கு அனுப்பி அலைக்கழிக்கின்றார்கள். பிரதேச செயலக கூட்டங்களுக்கு வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நாங்கள் கூட்டத்திற்கு சென்ற போது பிரதேச செயலக அதிகாரிகள் அவர்கள் கொழும்பில் நிற்பதாக கூறுகின்றார்கள். பின்னர் நாங்கள் பார்க்கின்றபோது அவர்கள் ஆலயத்திற்குள் நின்று ஆலயத்தை இடிப்பதற்கான வேலைத் திட்டத்தில் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடுகின்றார்கள். அதற்கான காணொளி ஆதாரமும் எம்மிடம் உள்ளது.

 பிரதேச செயலகத்தின் துணையுடனேயே இந்த கட்டடம் இடிக்கப்பட்டது. நட்பு ரீதியாகவோ அல்லது உறவு ரீதியாகவோ அதிகாரிகள் துணை போகின்றார்கள் என எமக்கு தெரியாது.

தரமற்ற மூலப் பொருட்கள்

 தற்போது ஆலய புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் தரமற்ற மூலப் பொருட்களாகவே காணப்படுகின்றன. ஆலய புனரமைப்பு முடிவடைந்து சில வருடங்களிலேயே ஆலய கட்டடங்கள் சேதமடையக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.

யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம் | Demolition Ancient Building Suthumalai Amman

 எமது ஆலயத்திற்கு என ஒரு பாரம்பரிய அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பிலேயே இனி அமைக்கப்படவுள்ள எமது ஆலயம் அமைக்கப்பட வேண்டும். தேவையற்ற கட்டடங்கள் ஆலயத்திற்கு தேவை இல்லை. இனி இடம்பெறுகின்ற நிர்மாண பணிகள் அரச திணைக்களம் ஒன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெற வேண்டும் என தெரிவித்தனர்.

மண்டைதீவு புதைகுழி சூத்திரதாரிக்கு அராலிப் பகுதியில் வழங்கப்பட்ட தண்டனை

மண்டைதீவு புதைகுழி சூத்திரதாரிக்கு அராலிப் பகுதியில் வழங்கப்பட்ட தண்டனை

இந்தியாவில் துயரம் : வீதியில் சென்ற பேருந்து மீது சரிந்து விழுந்தது மலை : பலர் பலி

இந்தியாவில் துயரம் : வீதியில் சென்ற பேருந்து மீது சரிந்து விழுந்தது மலை : பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022