மன்னாரில் உயிரிழந்த சிறுமி: மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
Mannar
SL Protest
Child Abuse
By Shalini Balachandran
மன்னாரில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது, இன்று(20) காலை 10 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.
அண்மையில் தலைமன்னாரில் பத்து வயதுடைய கியானுசியா என்ற சிறுமி தகாதமுறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
படுகொலைக்கு நீதி
குறித்த சிறுமியின் படுகொலைக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க கோரியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கொலையாளிக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் பல கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்