மீண்டும் வேகமெடுக்கும் டெங்கு நோய்ப் பரவல் : மேலும் நால்வர் பலி!
இந்த ஆண்டு (2023) இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,000 ஐத் தாண்டி உச்சத்தை அடைந்துள்ளது, அதுமாத்திரமல்லாமல் டெங்கு நோயினால் 04 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றுடன் சேர்த்து இந்த ஆண்டிற்கான மொத்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கையும் 43 ஆக உயர்ந்துள்ளது.
அதிகளவான நோய்த்தொற்றாளர்கள்
இந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை, 70,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள் 14,884 ஆக கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேபோல் இந்த ஆண்டுக்கான (2023) அதிகளவான நோய்த்தொற்றாளர்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் 33,000 க்கும் மேற்பட்ட தோற்றாளர்களுடன் பதிவாகியுள்ளது.
நவம்பர் மாதத்தின் 01-08 ஆம் திகத்திக்கிடையில் 1,685 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மழையுடன் கூடிய காலநிலை
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம், நுளம்பு உற்பத்தியினைத் தடுக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.