ஒரே வாரத்தில் 2,000 ஐக் கடந்த டெங்கு நோய்த்தாக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய ஆண்டின் முதல் வாரத்திலேயே டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அவருடைய கூற்றுப்படி கடந்த ஏழு நாட்களில் 2,316 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,
டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
"இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 2,316 பேருக்கு டெங்கு நோய் பரவியுள்ளது, அதன்படி, நாளொன்றுக்கு சுமார் 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்க
எனவே, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 88,398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 18,650 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தவிரவும் கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை 11,498 ஆக இருந்தது, இது 2023 இல் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |