ஆண்டின் தொடக்கத்திலேயே நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம்
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு 300 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் (2024) முதல் 6 நாட்களுக்குள்ளும் மாத்திரம் 1,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகளவான நோயாளர்கள்
அதில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 643 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த 06 நாட்களில் வடக்கு மாகாணத்தில் இருந்து 438 நோயாளர்களும் வடமேல் மாகாணத்தில் இருந்து 165 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் (2023) டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |