டெங்கு நோய் அபாயம் குறையவில்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானமாகச் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுளம்புகளின் பெருக்கம்
அத்துடன் சில மாவட்டங்களில் ஆரம்பத்தில் நுளம்புகளின் பெருக்கத்தை அவதானிக்க முடிவதுடன், அதன்பின்னரே நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாகவும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் கவனயீனமாக செயற்பட்டால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எனவே பொதுமக்கள் தமது சுற்றுபுறச் சூழலை மிகவும் தூய்மையாக பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |