மழையுடன் டெங்கு பரவலும் அதிகரித்துள்ளது:GMOA தெரிவிப்பு
GMOA Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
Disease
Rain
By Sindu
மழைக்காலத்துடன் இணைந்து டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 28 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 105,097 ஆக உள்ளது.
79 மரணங்கள்
மேலும் டெங்குவினால் 79 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க, டெங்கு பரவலைத் தடுப்பதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |