நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானம்
Ministry of Education
Weather
School Holiday
By Sindu
நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அதேநேரம் இன்றைய தினம் இலங்கை முழுவதிலுமுள்ள பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
தற்போதைய வானிலை நிலவரத்திற்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், க.பொ.த சாதாரண தர (O/L) தேர்வின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |