தீவிரமடைந்த ஓர்னாப் புயல்: இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த ‘ஓர்னாப்’ புயல், மேலும் தீவிரமடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளது.
இன்று (27.10.2026) அதிகாலை 2.30 மணியளவில், காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கில் புயல் மையம் கொண்டிருந்தது.
நாளை (28.10.2026) காலை ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்து இந்திய நிலப்பரப்பை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
புயலின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லையெனினும், அதன் காரணமாக இன்று நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
மேலும், சில பகுதிகளில் மணிக்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |