மன்னாரை அச்சுறுத்தம் டெங்கு : மக்களின் ஒத்துழைப்பை கோரும் பணிப்பாளர்

By Independent Writer Jul 04, 2026 01:03 PM GMT
Report
Courtesy: nayan

 நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெங்கு பெருக்கத்திற்கான அறிகுறிகள்

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படுகிறது. பாடசாலைகள், பொது இடங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் காணிகள் போன்ற 50க்கும் அதிகமான இடங்களில் டெங்கு பெருக்கத்திற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த மக்கள் சுற்றுப்புறச் சூழலையும், வீட்டின் உள்ளே நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

மன்னாரை அச்சுறுத்தம் டெங்கு : மக்களின் ஒத்துழைப்பை கோரும் பணிப்பாளர் | Dengue Threatens Mannar Seeks Public Cooperation

வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை (Fridge) அடிக்கடி கவனித்து சுத்தம் செய்ய வேண்டும்.

வீதியோரங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் பொதுமக்கள் கழிவுகளையோ குப்பைகளையோ கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.கை விடப்பட்டு கிடக்கும் காணி நிலங்களை சுத்தப்படுத்துவதற்கு உரிய சுகாதார மருத்துவ அதிகாரிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

24 மணித்தியாலங்களுக்குள் மருத்துவரை நாடவும்

காய்ச்சல் ஏற்பட்டால், குறிப்பாகச் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயுடையவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் மருத்துவரை நாட வேண்டும். காய்ச்சல் குறையாத பட்சத்தில், இரண்டு நாட்களில் மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று Full Blood Count (FBC) மற்றும் டெங்குவிற்கான NS1 பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

மன்னாரை அச்சுறுத்தம் டெங்கு : மக்களின் ஒத்துழைப்பை கோரும் பணிப்பாளர் | Dengue Threatens Mannar Seeks Public Cooperation

அரச மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் அனைவரும் தினமும் குறைந்தது அரை மணித்தியாலங்கள் (30 நிமிடங்கள்) தங்களது வளாகத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஒதுக்க வேண்டும். டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய சாத்தியமான இடங்களை இனங்கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தல்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

கணிசமான அளவில் நுளம்பு பெருக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பாடசாலை வளாகங்களில் வார அடிப்படையில் முழுமையாக பரிசோதிக்க வேண்டும் தொண்டு நிறுவனங்கள், முப்படையினர், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொது இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

76,000 முதியவர்களுக்கு கிடைக்காமல் போகும் ‘அஸ்வசும’ கொடுப்பனவு

76,000 முதியவர்களுக்கு கிடைக்காமல் போகும் ‘அஸ்வசும’ கொடுப்பனவு

வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

காணி மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கக் கூடிய வெற்றுப் பாத்திரங்கள், கொள்கலன்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களது வீட்டுச் சூழலை தினமும் அரை மணித்தியாலங்கள் சுத்திகரிக்க வேண்டும்.சேகரிக்கப்படும் குப்பைகளை நீர் தேங்காத வண்ணம் முறையான வழிகளில் அழிக்க அல்லது அப்புறப்படுத்த வேண்டும்.

மன்னாரை அச்சுறுத்தம் டெங்கு : மக்களின் ஒத்துழைப்பை கோரும் பணிப்பாளர் | Dengue Threatens Mannar Seeks Public Cooperation

சமீபத்திய கள ஆய்வுகளின்படி 1,500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக இருந்த பல வீடுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட இடங்கள் அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் (Larvae) பெருகுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

"சுய தூய்மையும், கூட்டுப் பொறுப்பு" மிக அவசியமானதாகும்

டெங்குவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள "சுய தூய்மையும், கூட்டுப் பொறுப்பு" மிக அவசியமானதாகும். இலங்கையின் வட மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மன்னாரை அச்சுறுத்தம் டெங்கு : மக்களின் ஒத்துழைப்பை கோரும் பணிப்பாளர் | Dengue Threatens Mannar Seeks Public Cooperation

முசலி மற்றும் மாந்தை மேற்கு ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார் நகர் பகுதி 23 நோயாளர்களும்,நானாட்டான் பகுதியில் கடந்த காலங்களில் அதிகமாக நோயாளர்கள் இருந்தபோதிலும், இந்தத் தடவை 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மடு பகுதியில் 6 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

கோரம் இன்றி ஒத்திவைக்கப்பட்ட சாவகச்சேரி நகர சபை விசேட கூட்டம்!

கோரம் இன்றி ஒத்திவைக்கப்பட்ட சாவகச்சேரி நகர சபை விசேட கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்