இலங்கையில் கொரோனாவை தொடர்ந்து தொற்றுகிறது ‘டீனியா’
srilanka
corona
tinea
By Jaso
இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிர தன்மை இன்னமும் குறைந்தபாடாக இல்லை.
தற்போது டெல்டா என்ற புதியவகை வைரஸ் பரவலாக தொற்றியுள்ளதாக மருத்துவ சங்கம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நிலையில், மற்றுமொரு நோய் பற்றிய எச்சரிக்கையொன்று வெளிவந்துள்ளது. டீனியா என்ற ஒருவகையான தோல் நோய் இவ்வாறு இலங்கையில் பரவ ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோயானது தொற்று நோய் என்பதோடு வடமத்திய மாகாணத்தில் பரவத் தொடங்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு வயதை உடையவர்களுக்கும் விரைவில் தொற்றக்கூடிய சுபாவம் கொண்ட இந்த நோய், குறிப்பாக மக்கள் சனநெரிசலாக உள்ள பிரதேசங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் எள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி