காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Denmark
Death
By Mathu
காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலை ஏற செல்வதாக கூறி விடுதியில் இருந்து வெளியேறிய குறித்த சுற்றுலாப் பயணி மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என விடுதி உரிமையாளர் காவல்துறையிடம் தகவல் வழங்கியிருந்தார்.
மரணத்திற்கான காரணம்

இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அவர் மலை ஏறுவதாக அறிவித்திருந்த வனப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டு பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்