டென்மார்க் பிரதமர் தாக்கப்பட்ட விவகாரம்:வெளியான தகவல்
டென்மார்க் (Denmark) பிரதமர் மெட்டே பிரடெரிக்சனை (Mette Frederiksen) தாக்கிய மர்ம நபருக்கு ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தினால் பிரதமர் அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்காகிய மெட்டே பிரடெரிக்சனை உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவரின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதல்
இதனையடுத்து தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் , "அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன்.
இருப்பினும், தற்போது நலமாகவே இருக்கிறேன். எனக்காக குரல் கொடுத்தவர்கள், ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி," என கூறினார்.
மேலும், இந்த சமயத்தில் தனது குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |