யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம்

Sri Lankan Tamils Jaffna
By Dharu Oct 03, 2026 11:54 PM GMT
Report

இந்தியாவில் சட்டபூர்வமான திருமண ஆவணங்கள் இல்லாத நிலையில் தங்கியிருந்த எட்டு வார கர்ப்பிணியான இலங்கைப் பெண்ணை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பவித்ரா கீத்தீஸ்வரன் என்ற பெண், திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவில், பவித்ராவை உடனடியாக இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்றும், அவரும் அருண்குமாரும் தங்களது திருமண உறவை சட்டரீதியாகப் பதிவு செய்து கொள்ள 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி சி. சரவணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிள்ளைகளை பாதித்த விடயம் : அவரே வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிள்ளைகளை பாதித்த விடயம் : அவரே வெளியிட்ட தகவல்

சுற்றுலா விசா

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவைச் சேர்ந்த அருண்குமார், கடந்த ஆண்டு இலங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியபோது பவித்ராவை சந்தித்துள்ளார்.

யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் | Deportation Issue Concerning Pregnant Lankan Woman

பவித்ராவின் தந்தை நடத்தி வந்த வியாபார நிலையத்தில் அவரை சந்தித்ததாகவும், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மே 14ஆம் திகதி பவித்ரா, சுற்றுலா விசாவில் அருண்குமாருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த ஜூன் 4ஆம் திகதி லால்குடியில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவித்ராவுக்கு மே 14ஆம் திகதி முதல் ஜூன் 13ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கே இந்தியாவில் தங்குவதற்கான சுற்றுலா விசா அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக இந்திய அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விசா காலம் முடிந்த பின்னரும் அவர் இந்தியாவில் தங்கியிருந்ததால், அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் பாவனை : பொதுமக்களுக்கு அரசு விடுத்துள்ள அழைப்பு

எரிபொருள் பாவனை : பொதுமக்களுக்கு அரசு விடுத்துள்ள அழைப்பு

இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம்

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9ஆம் திகதி பவித்ரா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் | Deportation Issue Concerning Pregnant Lankan Woman

  தனக்கும் அருண்குமாருக்கும் இடையிலான திருமணத்தை அங்கீகரித்து, 1954ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

பவித்ரா மற்றும் அருண்குமார் இருவரும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தங்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றதாக பவித்ரா ஏற்கெனவே அளித்திருந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததாக அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

ஆனால், அந்த திருமணத்தை இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பு வாதிட்டது.

இதனால், சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு திருமண முறையின் கீழும் அவர்களது திருமணம் தற்போது வரவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சி. சரவணன், தம்பதியினர் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, “சட்டரீதியாகப் பார்த்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு திருமண வடிவத்தின் கீழும் தம்பதியினரின் திருமணம் வரவில்லை.

ஆனால், இந்த உறவைச் சிதைப்பதற்கு நீதிமன்றம் விரும்பவில்லை” எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். பவித்ரா கர்ப்பமாக இருப்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 அல்லது சிறப்பு திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றில் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் திருமணத்தை சட்டரீதியாக நடத்தி பதிவு செய்து கொள்ள தம்பதியினருக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காலி - கொஸ்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு

காலி - கொஸ்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு

தொடர்ந்து தங்குவது தொடர்பான விண்ணப்பம்

அந்த காலப்பகுதியில் பவித்ராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பவித்ரா இந்தியாவில் தொடர்ந்து தங்குவது தொடர்பான விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பவித்ரா எட்டு வார கர்ப்பிணியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவில் அருண்குமாரைத் தவிர தனக்கு வேறு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பவித்ராவின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பவித்ரா கீத்தீஸ்வரன், விசா காலம் முடிந்ததால் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

“அருண்குமாரை பிடித்துப் போனதால் அவருடன் இந்தியா வந்தேன். விசா நீட்டிக்கப்படாததால் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வந்தேன்” என அவர் கூறியுள்ளார்.

தனது தாய் சிறு வயதிலேயே உயிரிழந்ததாகவும், 12ஆம் வகுப்பு வரை படித்த பின்னர் தந்தையுடன் வசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் தொடர்ந்து வசிக்கவே விரும்புவதாகவும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், திருமணத்தை சட்டரீதியாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை தம்பதியினருக்கு வழங்கியதுடன், கர்ப்பிணியான இலங்கைப் பெண்ணை உடனடியாக நாடு கடத்தாமல் மருத்துவ உதவிகளும் கிடைக்க நீதிமன்றம் வழிவகுத்துள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024