நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றக் கும்பல் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுவின் உறுப்பினராகக் கருதப்படும் வெலிகம சஹான் என்று அழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும் என்பவர் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து (India) நாடு கடத்தப்பட்ட பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து நேற்றிரவு (28) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெலிகமவைச் சேர்ந்த 31 வயதான குறித்த சந்தேக நபர், சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்
மாத்தறை மற்றும் பாணந்துறை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹரக் கட்டா, மிடிகம சூட்டி மற்றும் குடு சலிந்து உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்காக அவர் துப்பாக்கிதாரியாக செயற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
