கொழும்பு துறைமுக கிழக்குக் முனையத்தின் அபிவிருத்தி விவகாரம்! பணிகளை ஆரம்பிக்கிறது சீனா
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முழுமையாக இயக்கப்படும் முனையமான கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்காக, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டத்தின் சிவில் வேலைகளுக்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விலைமுறிகள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தம் அக்ஷன் இன்ஜினியரிங் கம்பனி(Action Engineering Company) மற்றும் சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி லிமிட்டட்(China Hopper Engineering Company Limited) கூட்டு வணிகத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,