விடுதியில் உயிரிழந்த இரத்தினக்கல் வர்த்தகருக்கு கொரோனா உறுதி! உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
Sri Lanka
Corona Virus
Dhambulla
By Vasanth
தம்புள்ளை நகரில் விடுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல் வர்த்தகர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தம்புள்ளை பொலிஸார், தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்கள், மற்றும் விடுதியின் உரிமையாளர்கள் என அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதுடைய குறித்த நபர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு காரணமா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி