தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்பு
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றதாக அரச தலைவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
அமைச்சராக பதவியேற்கின்றார் தம்மிக்க பெரேரா!!
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெவ்ரிவிக்கின்றன.
இதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, இன்று மாலை அரச தலைவர் மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு கடந்த 22 ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
