மொட்டுவின் அதிபர் வேட்பாளராக பிரபல வர்த்தகர்...!
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா(dammika perera) உட்பட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில்,தம்மிக்க பெரேரா மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சாகர காரியவசம் அளித்த பதில்
இது தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) கொழும்பு ஊடகமொன்று வினவிய போது,
அதிபர் வேட்பாளர் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார். அதிபர் வேட்பாளரை அறிவிப்பதில் அவசரமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில்,பசில் ஆறாவது தடவையாக சந்திப்பு
இதேவேளை, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe)வுக்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச(basil rajapaksha)வுக்கும் இடையில் நேற்று முன்தினம் (9) மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையே நடந்த ஆறாவது சந்திப்பு இதுவாகும்.
மேலும், அதிபர் வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஆவதாக அக்கட்சியின் பல எம்.பி.க்கள் கடந்த வாரம் அதன் தலைமையிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அது உண்மை என்பதை பசில் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |