சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக தொடர்ந்தும் தோனி:ரசிகர்களுக்கு கடும் மகிழ்ச்சி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றன. அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், அல்லது விடுவித்துக் கொள்ளலாம். மேலும் வீரர்களை பரிமாறிக் கொள்ளவும் விதிகள் உள்ளன.இதன் அடிப்படையில் அணிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
தலைவர் பொறுப்பில் தோனி
இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் பொறுப்பில் தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுலை தக்கவைத்துள்ள லக்னோ அணி
லக்னோ அணியின் தலைவராக இருக்கும் கே.எல். ராகுலை அந்த அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2022 சீசனில் சம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ்
சென்னை அணிக்காக விளையாடி வந்த அம்பதி ராயுடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதேபோன்று 2024 இல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ரி 20 போட்டிக்கு தயாராகுவதற்காக ஐபிஎல் தொடரை தவிர்ப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்ததை தொடர்ந்து அவரும் அணியில் இருந்து விலகியுள்ளார்.
இவ்விரு வீரர்களுடன் பிரிட்டோரியஸ், சேனாபதி, பகத்வர்மா, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகியோருடன் மொத்தம் 8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் விடுவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |