துருவ் -சிகோர்ஸ்கி- கமோவ் ஹெலிகள் மீட்பு பணிகளில் குதிப்பு!
இலங்கையை டிட்வா சூறாவளி கடுமையாக சுருட்டி பேரவலத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே அயலவர்க்கு முன்னுரிமை வழங்க இந்தியப் பெரியண்ணர் களமிறங்கியுள்ளார்.
9 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வாறு இலங்கையில் ஏற்பட்ட பெருமழை மற்றும் மண்சரிவுகளின் பேரழிவையடுத்து அன்று தனது ஐ.என்.எஸ் சட்லெஜ் மற்றும் ஐ.என்.எஸ் சுனன்யா ஆகிய இரண்டு கப்பல்களையும் ஒரு சி-17 குளோப்மாஸ்டர் சரக்குவிமானத்தையும் அனுப்பிய இந்தியா இப்போது உடனடியாகவே களம் இறங்கியுள்ளது.
ஏனெனில் சிறிலங்கா கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவு விழாக்களில் பங்கேற்பதற்காக ஏற்கவே இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தும் இன்னொரு புதிய போர்க்கப்பலான உதயகிரியும் இந்தவாரம் கொழும்பு துறைமுகத்துக்கு சென்று அங்கு தரித்து நிற்கின்றன.
அதுவும் கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் தான் சேவையில் இணைக்கப்பட்ட உதயகிரி கப்பலின் முதல் வெளிநாட்டு பயணமும் இதுதான்.
இந்த நிலையில் சிறிலங்கா கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய கலங்களுக்கு வேலை வந்துள்ளது.
முதற்கட்டமாக விக்ராந்தில் உள்ள துருவ் K 3 சிகோர்ஸ்கி MH-60R மற்றும் கமோவ் Ka-31 உலங்குவானுர்திகளில் சிலவற்றை மீட்பு பணிகளில் களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது 36 வான்கலங்களையும் விமானங்களையும் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந் இந்தவேளை கொழும்பில் நிற்பதும் ஒருகாலத்தில் ஜேவியினர் கிளர்ச்சி செய்தபோது அழிக்க சென்ற இந்திய வான்கலங்கள் இப்போது அந்த அரசாங்கத்தின் அழைப்பில் மீட்பு பணிகளில் இறங்குவது புதிய பதிவு.
ஒரு காலத்தில் இந்திய எதிர்ப்பை தமது முக்கிய கொள்கைகளில் கொண்டிருந்த அதே ஜேவிபியின் தலைவர் என்ற வகையில் இப்போதைய அவலத்தில் இந்திய உதவியை கோருவது ஆரம்பத்தில் அனுரவுக்கு சங்கடமாக இருந்தாலும் பேரவலத்தின் நிலையால் அவரது பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல்(ஓய்வு) சம்பத் துய்யகொந்தா இந்தியாவிடம் வாய்விட்டு இந்த உதவியை கோரியுள்ளார்.
இதற்காகவே காத்திருந்த இந்தியா இப்போது விக்ராந்த விமானந்தாங்கியின் கப்ரன் அசோக்ராவுக்கு களம் இறங்க உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த விடயம் உட்பட்ட இலங்கை பேரவலத்தை தாங்கிவருகிறது இன்றைய செய்திவீச்சு ….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்