அமைச்சர் டயானா கமகேவிற்கு கடும் நெருக்கடி -நீதவான் பிறப்பித்த உத்தரவு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் குறிறப்புலனாய்வுப்பிரிவிற்கு கொழும்பு பிரதம நீதவான் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி குடிவரவு - சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றவாளியாக கருதப்பட்டால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை நீதவான் அறிவித்துள்ளார்.
நீதிமன்றின் அறிவிப்பு
டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரு வெவ்வேறு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் என்பதற்கு போதிய சாட்சியங்கள் நீதிமன்றில் இருப்பதாக பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
