அரசாங்கத்திடம் பாரிய நிதியை கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!
டிட்வா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளமைக்கும் நிதி திட்டத்திற்கு (Rebuilding Sri Lanka Fund) லண்டன் வாழ் தொழிலதிபர் ஒருவர் பத்து மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் இயங்கும் நகையகம் ஒன்றின் உரிமையாளரும் மற்றும் யாழின் வர்த்தகருமான வேலுப்பிள்ளை சிவசுந்தரம் என்பவரே இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.
மறுசீரமைப்புப் பணி
இந்தநிலையில், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பத்து மில்லியன் ரூபாய்க்கான காசோலையை சிவசுந்தரம் நேற்று (11) ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |