புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு வடக்கு - கிழக்கில் சங்கட நிலைமை
சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக, வெளிநாட்டு (புலம்பெயர்) முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஆனாலும், வடக்கு - கிழக்கில் முதலீடுகளை செய்யத் தலைப்படும் தமிழ் முதலீட்டாளர்களுக்கு பாரிய சிக்கல்கள் நிலவுவதை ஒருசில சம்பவங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதில் எமது கரங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு செய்தி தான், கிளிநொச்சியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட கட்டளை.
விசாரணைக்கான அழைப்பு
இத்தகைய செயற்பாடுகள் வடக்கு - கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முற்படும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு சங்கட நிலைமையை ஏற்படுத்தும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் செயற்பாடுகள் புலம்பெயர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை தடுப்பதோடு, முதலீட்டாளர்களின் உற்சாகத்தையும் தடுப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனை சிறிலங்கா அரசாங்கமும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கவனத்தில் எடுத்து புலம்பெயர் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால், பொருளாதார நெருக்கடியை குறைக்கும் திட்டங்களில் முதலிட புலம்பெயர் முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
