அரச காணி அபகரிப்பிற்கு எதிராக வடமராட்சியில் வெடித்த போராட்டம்

Jaffna Sri Lankan Peoples SL Protest Sri Lanka Government
By Independent Writer Apr 20, 2026 10:43 AM GMT
Report
Courtesy: லின்ரன்

வடமராட்சி கிழக்கில் நடைபெறும் அரச காணி அபகரிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் (20) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துனை போகும் அரச அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

 பிரதேச செயலகத்தில் முறைப்பாடு

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜே/420 கிராம அலுவலர் பிரிவில் உள்ள அரச காணியை, கடந்த சில ஆண்டுகளாக புலம் பெயர் நாட்டில் வசித்து வரும் நபர் ஒருவர், போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் கையகப்படுத்தியுள்ளார்.

அந்தப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, குறித்த காணியை சுமார் 90 இலட்சம் ரூபாய்க்கும் அதிகத் தொகைக்கு அவர் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச காணி அபகரிப்பிற்கு எதிராக வடமராட்சியில் வெடித்த போராட்டம் | Diaspora Seized Govt Land In Vadamarachchi East

இது தொடர்பாக அப்பகுதி கிராம முன்னேற்றச் சங்கம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பிரதேச செயலக தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச செயலகத்தின் மந்த கதியிலான செயற்பாட்டை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாணக் காணி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் செயற்பட்ட காணி ஆணையாளர், குறித்த காணி அரச காணி என்பதை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

விடுக்கப்பட்ட கோரிக்கை 

ஆணையாளரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இந்தநிலையில் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் அரச காணியைத் தனியார் காணியாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஆதாரங்களைத் தேடுகிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரச காணி அபகரிப்பிற்கு எதிராக வடமராட்சியில் வெடித்த போராட்டம் | Diaspora Seized Govt Land In Vadamarachchi East

தமது குறைகளை முறையிடச் செல்லும் பொதுமக்களை மரியாதையற்ற முறையில் நடத்தும் பிரதேச செயலாளரின் அணுகுமுறை குறித்தும் இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலம் அரச காணியை விற்பனை செய்த நபர் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடமையைச் செய்யத் தவறிய மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய மறுக்கும் அதிகாரிகளை உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். அரச காணிகளைப் பாதுகாப்பதில் நிலவும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இந்தநிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்ததுடன் போராட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானைத் தாக்கிய முதலாவது சுனாமி அலை

ஜப்பானைத் தாக்கிய முதலாவது சுனாமி அலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015