வெளிநாடு ஒன்றில் யாழ்ப்பாண பெண்ணுக்கு நடந்த விபரீதம் - தானாகவே சரணடைந்த கணவர்
சுவிஸ்லாந்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவரை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த 25 வருடங்களாக குறித்த பெண் குடும்பத்துடன் சுவிற்சர்லாந்தில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட முரண்பாடு இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது.
எதிர்ப்பின்றி சரணடைந்த கணவர்
ஆர்கெவ் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்விஸ் பகுதியில் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் பெண், கடந்த புதன்கிழமை காலையில் கொல்லப்பட்டார்.
சிற்றுண்டிச்சாலைக்குள் கத்தியுடன் நுழைந்த கணவர் மனைவியை சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்தார்.
காவல்துறையினர் அங்கு சென்றபோது , சந்தேகநபரான கணவர் எதிர்ப்பின்றி சரணடைந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
