லொஹான் ரத்வத்தையுடன் சிறைக்கு சென்றேனா? முற்றாக மறுக்கிறார் அழகுராணி
lohan ratwatte
beautiy
denies
By Sumithiran
இலங்கையின் 2021 அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகடா சில்வா, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றதாக வெளியான செய்திகள் பொய்யானவை என மறுத்துள்ளார்.
அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது நண்பர்களுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு குடிபோதையில் சென்று கலவரத்தை ஏற்படுத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.
"என் பெயரும் இதில் சம்பந்தப்பட்டது. எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் அங்கு கூட இல்லை. நான் இராஜாங்க அமைச்சருடன் தொடர்பில் இல்லை, அவரைப் பற்றி எனக்குத் தெரியாது, ”என்று அவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.