வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களைப் பூமி விழுங்கியதா!
இலங்கையின் இறுதி யுத்தத்தில் சமாதானத்தின் அடையாளமான வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றதாக கூறப்படும் பலர் இன்றளவும் காணாமல் போனதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, உண்மை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் நடந்த ஆயுத மோதல்களின் இறுதி கட்டத்தில், “பாதுகாப்பாக சரணடையலாம்” என்ற நம்பிக்கையுடன் வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் எங்கே? உயிருடன் இருக்கிறார்களா? இல்லையெனில் என்ன நடந்தது? என்ற கேள்விகள் பதிலின்றி உள்ளன என அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனவர்களின் விவரங்களைத் தெளிவுபடுத்த சுயாதீன விசாரணை அவசியம் என்று கூறுகின்றனர்.
சமாதானத்தின் அடையாளமாக உள்ள வெள்ளைக் கொடி ஏந்தியவர்களின் நிலை தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டியது அரசின் கடமை, என அவர்கள் வலியுறுத்தினர்.
இவ்வாறான பின்னணியில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா வெள்ளைக்கொடி விவகாரம் தெரிவித்த சில விடயங்களில் பல கோணத்தில் கேள்விகளை எழுப்ப தூண்டியுள்ளன.
ராஜபக்சர்களை இலக்குவைத்து தனது கருத்துக்களை மையப்படுத்தியிருந்தாலும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் எழும் கேள்விகள் குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |