தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு

Sri Lankan Tamils Jaffna chemmani mass graves jaffna Protest
By Independent Writer Aug 17, 2026 09:07 AM GMT
Report

புதிய இணைப்பு

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றடைந்தது.

இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.

பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில் இன்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு | Jaffna Rally Demanding Justice For Tamil Genocide

மேலதிக தகவல் - த.பிரதீபன் 


முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் -2 போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணி செம்மணி வரை சென்று குறித்த பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் பேரணியில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சர்வதேச நீதி வேண்டும்

இதன்போது “இலங்கை அரசு தமிழ் குழந்தைகளை அவர்களின் கனவுகளுடன் புதைத்தமைக்கு சர்வதேச நீதி வேண்டும்“, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு நீதி வேண்டும்.” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு | Jaffna Rally Demanding Justice For Tamil Genocide

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான போராட்டம் இன்று (17) வரை நான்கு நாட்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரக்குறைவாக பேசிய உயர் அதிகாரிகள் - யாழில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

தரக்குறைவாக பேசிய உயர் அதிகாரிகள் - யாழில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026