மற்றொரு உற்பத்தியையும் பாதித்தது எரிபொருள் தட்டுப்பாடு!
tea
srilankan crisis
tea production
diesel shortage
By Kanna
இலங்கையின் டீசல் தட்டுப்பாடு பல தொழில்துறைகளுக்கு, குறிப்பாக மத்திய மலையகத்தில் உள்ள தேயிலை தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
13 மணி நேர மின்வெட்டின் போது, டீசல் தட்டுப்பாட்டின் காரணமாக ஜெனரேட்டர்களுக்கு டீசல் வழங்க முடியவில்லை.
இதனால், தேயிலை உற்பத்தி செய்வதில் தேயிலை தொழிற்சாலைகள் சிரமப்படுகின்றன.
தேயிலை உற்பத்தியின் வழக்கமான செயல்முறை, தேயிலை இலைகள் பறிக்கப்பட்டவுடன் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு நசுக்கப்படும்.
இருப்பினும் இந்த முக்கிய செயல்முறை மின்வெட்டு மற்றும் டீசல் பற்றாக்குறையால் தடைப்பட்டுள்ளது.
இவ் நெருக்கடி நீடித்தால் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தி தடைப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண சுட்டிக்காட்டியிருந்தார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 18 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்