இடைக்கால நிர்வாக சபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும்

Sri Lanka LTTE Leader India Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Dec 30, 2023 11:42 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தனிக்கவேண்டிய தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது.

இந்தியா புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பாதகமான ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றது என்பது போன்ற ஒரு பேச்சு தமிழ் மக்கள் மனங்களிலும், சர்வதேச நாடுகள் மத்தியிலும் ஏற்பட ஆரம்பித்தன.

திலீபனின் மரணம் இப்படியான ஒரு எண்ணத்தையும், சந்தேகத்தையும் அனைத்து மட்டங்களிலும் பரப்பியிருந்தது.

தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள்

இதற்கு மேலாக, தமது 5 அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி, விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை, தமிழீழத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வந்தார்கள்.

திலீபன் முன்வைத்த 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான தனது உண்ணா விரதத்தை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்திருந்தான்.

இதேபோன்று தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகுந்த உணர்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தன.

இந்தியாவின் மீது தமிழ் மக்களை காழ்ப்புணர்வு கொள்ள வைத்தன. ஏற்கனவே திலீபனின் மரணம் இந்தியாவின் அமைதிகாக்கும் பணிக்கு(?) தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியிருந்த சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் வழங்காமல், தொடர்ந்து பல உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததானது, இந்திய அதிகாரிகளை ஆட்டம் காண வைத்தன.

இடைக்கால நிர்வாக சபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் | Dileepan Death Tamil Peoples India Sri Lanka Ltte

இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் அவர்களுக்கு பெரிய தலையிடியாகவே அமைந்திருந்தன.

இந்தியப் படை தமிழ் மண்னை ஆக்கிரமிக்கச் சென்ற ஒரு படை என்பது போன்ற எண்ணம் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுவிடக் கூடிய அபாயத்தை, இந்தியா எதிர்கொள்ள ஆரம்பித்தது. இப்படியான ஒரு எண்ணப்பாடு வேகமாகப் பரவுவதைத் தடுக்க இந்தியா அவசர அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டியது.

புலிகளுக்கு ஏதாவது ஒன்றை வழங்கிவிட்டு, அதன் பின்னரே புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியா திட்டம் தீட்டியது.

திலீபனின் மரணத்தை தொடர்ந்து உலகத்தின் பார்வையில் புலிகள் மீது ஏற்பட ஆரம்பித்திருந்த அனுதாபத்தை புலிகளைக் கொண்டே உடைத்து விட்டு, அதன் பின்னரே புலிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என்று இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

இடைக்கால நிர்வாக சபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் | Dileepan Death Tamil Peoples India Sri Lanka Ltte

வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உடனடியாக அமைத்து, உலகத்தின் சந்தேகத்தைப் போக்கிவைப்பதற்கு இந்தியா தீர்மானித்தது. ஜே.ஆருடன் கலந்தாலோசித்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் இதற்கான திட்டத்தை வரைந்தார்.

(இந்த இடத்தில் ஜே.ஆர். தனது குள்ள நரித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.புலிகளுக்கும் இந்தியாவிற்கும் பகையை வளர்க்கச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த ஜே.ஆர்., இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதில் மேற்கொண்ட சதியையும், அதற்கு தெரிந்துகொண்டே இந்தியா பலியாகிப் போன விபரத்தையும் அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.)

வடக்கு கிழக்கை நிர்வகிப்பதற்கென்று 11 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது என்றும், அதில் விடுதலைப் புலிகள் 5 உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இரகசிய ஒப்பந்தம்

இதற்கான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக செப்டெம்பர் 28ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்குடாவிற்கு விரைந்தார். பலாலி விமானப்படைத் தளத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து உரையாடினார்.

புலிகள் தரப்பில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மற்றும் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையா போன்றோரும் சென்றிருந்தார்கள். மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்தச் சந்திப்பில், இடைக்கால நிர்வாகசபை அமைப்பது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

இடைக்கால நிர்வாக சபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் | Dileepan Death Tamil Peoples India Sri Lanka Ltte

அதே தினத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஒரு ஆய்வு நூலில், இந்த இரகசிய ஒப்பந்தம் பற்றிய விபரம் வெளியிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் சார்பில் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையாவும், இந்திய அரசு சார்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை அதிகாரி ஹர்தீப் பூரியும், அந்த இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

அந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற விபரங்கள் 

பின்வரும் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கான ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு, சிறிலங்காவின் பிரதமர் இந்திய தூதுவரிடம் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

த.வி.புலிகள் – 5

த.வி.கூ – 2

முஸ்லிம்கள் – 2 (இருவரில் ஒருவர் புலிகளாலேயே நியமிக்கப்படுவார்)

சிங்களவர்கள் - 2

மொத்தம் 12 பிரதிநிதிகள்.

இந்த இடைக்கால நிர்வாக சபையின் தலைவரை புலிகள் ஆலோசனையுடன் சிறிலங்காவின் அதிபர் நியமிப்பார்.

பெங்களூர் முன்மொழிவுகளின் 10.1, 10.2 பிரிவுகளின்படி, ஜே.ஆர். தனது நிறைவேற்று அதிகாரங்களில் சிலவற்றை, இடைக்கால நிர்வாக சபையின் தலைவருக்கு வழங்குவார்.

வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரம் இந்த இடைக்கால நிர்வாக சபைக்கு இருக்கும்.

இந்தியத் தூதுவரிடம் 13.10.1987ம் திகதி புலிகள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைககள், இந்த இடைக்கால நிர்வாக சபை மூலம் நிறைவேற்றப்படும்.

இடைக்கால நிர்வாக சபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் | Dileepan Death Tamil Peoples India Sri Lanka Ltte

1987ம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியப் பிரதமரால் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் விடுதலைப் புலிகள் வழங்குவார்கள்.

புலிகள் அமைப்பின் உறுப்பினர்களதும், தலைவர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் புலிகள் தங்களிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை கையளிப்பார்கள்.

மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு புலிகள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

இந்தியாவும் விடுதலைப் புலிகளும் ஒருவருக்கு எதிராக மற்றவர் மேற்கொண்டுவரும் பிரச்சார நடவடிக்கைளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

30ம் திகதிக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகசபை பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இந்திய அரசும், இலங்கை அரசும், இந்த இரகசிய ஒப்பந்தத்தின் வெளிப்படையான அம்சங்கள் சிலவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்.

இவற்றிற்கு பதிலாக விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டங்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு அந்த இரகசிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜே.ஆர்.மேற்கொண்ட தந்திரம்

இலங்கை-இந்திய ஒப்பந்திற்கு எதிராக தென் இலங்கையில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பு, சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆர்.இனது காய்நகர்த்தல்களுக்கு தொல்லையாக இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அதுபோன்ற எதிர் அலைகள் ஜே.ஆருக்கு உதவவே செய்தன.

தென்பகுதி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்கு என்று கூறி, ஒப்பந்தத்தின் சரத்துக்களில் சிறிலங்கா அரசிற்கு சாதகமான அம்சங்களை இணைத்துக் கொள்ளுவதற்கு ஜே.ஆரால் முடிந்திருந்தது.

தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நெருக்குதல்களை சமாளிப்பதற்காகவே இடைக்கிடையே சில கடுமையான முடிவுகளை தான் எடுக்கவேண்டி இருப்பதாக, இந்தியத் தரப்பை நம்பவைப்பதற்கும் ஜே.ஆரால் முடிந்திருந்தது.

இடைக்கால நிர்வாக சபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் | Dileepan Death Tamil Peoples India Sri Lanka Ltte

இடைக்கால நிர்வாக சபை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜே.ஆர். மிகவும் அழகாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினாலோ, இந்தியத் தூதுவர் தீட்ஷித்தினாலோ, ஜே.ஆரின் காய் நகர்த்தல்களைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லைளூ அவரது தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கவும் முடியவில்லை.

ஜே.ஆரின் தந்திரோபாய நடவடிக்கைளைப் பரிந்துகொள்ளும் அனுபவமும் அவர்களுக்கு இருக்கவில்லை. மிகவும் இலகுவாகவே அவர்கள் ஜே.ஆரின் வலையில் வீழ்ந்துவிட ஆரம்பித்தார்கள்.

இரகசிய விவாதம்

இது இவ்வாறு இருக்க, ஜே.ஆரின் காய் நகர்த்தல்கள் பற்றிய ஒரு விவாதம் யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள், ஜே.ஆர். மேற்கொள்ள ஆரம்பித்திருந்த சதியை வெற்றிகொள்வது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.

ஜே.ஆரின் தந்திர வலைக்குள் புலிகள் சிக்காமல் தப்பி விடுவதுடன், அவரது வலையை எப்படி தமது அடுத்த நகர்வுகளுக்கு சாதகமாக்கிக்கொள்வது என்றும் அவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.

சிறிலங்காவின் சதிவலைகளில் இந்தியா

சிறிலங்காவின் சதிவலைகளில் இந்தியா

திலீபனின் மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்கள்

திலீபனின் மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ் ஓட்டுமடம், கிளிநொச்சி, Brampton, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், London, United Kingdom

08 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, மாதகல், முத்தையன்கட்டு, Markham, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, வெள்ளவத்தை

04 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், நோர்வே, Norway

05 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், St. Gallen, Switzerland

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022