இதற்காகதான் திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும்: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

Wimal Weerawansa Election Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker Aug 31, 2024 11:29 PM GMT
Report

பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் உக்ரைன் (Ukraine)  போன்று இலங்கை மாறாமல் இருப்பதற்கு திலித் ஜயவீரவை ( Dilith Jayaweera)  ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa)  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய மூலோபாய கருத்திட்டம் வெளியீடு நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க சட்டமூலம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7 சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு

38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு

திலித் ஜயவீர

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் சட்டம் இலங்கையில்தான் முதன்முறையாக இயற்றப்பட்டுள்ளது.உலகில் எந்த நாடுகளிலும் இவ்வாறான சட்டங்கள் இயற்றப்படவில்லை.

இதற்காகதான் திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும்: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு | Dilith Jayaweera Should Be President Wimal Said

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'இனம் மற்றும் மத அடிப்படைவாதங்களை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெறும் முரண்பாடுகளை விசாரணை செய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுப்படுத்தல்' என குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி லிபரல்வாதிகளின் நிலைப்பாடு இன்று இவ்வாறு மாற்றமடைந்துள்ளது.

தமிழர் பகுதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

தமிழர் பகுதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

தெளிவான தீர்மானம்

சட்டத்தின் ஊடாக இலங்கையை பிறிதொரு பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் போன்று மாற்றியமைப்பதை தடுப்பதற்கு தேசியத்துக்காக திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்காகதான் திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும்: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு | Dilith Jayaweera Should Be President Wimal Said

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்றதன் பின்னர் பிரச்சினைகள் நிறைவடைந்துவிட்டது என்று கருதுவது முற்றிலும் தவறானது.

இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையாண்மை இன்றும் அச்சுறுத்தல் நிலையில் காணப்படுகிறது. உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பாடம் கற்பிக்கும் அமெரிக்க ஆசியாவில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு தமக்கு ஏற்றாற்போல் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளது.

பங்களாதேஷிலும் இலங்கையிலும் இவ்வாறான தன்மையே ஏற்பட்டது. ஆகவே நாட்டு மக்கள் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என்றார்.

முழு இலங்கை தமிழ் மக்களிடமும் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

முழு இலங்கை தமிழ் மக்களிடமும் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021