கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்து- ஆபத்தான நிலையில் மூவர்!
accident
hatton
central province
dimbula pathana
By Kalaimathy
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகர உள்வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரும், முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






