ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டது தீர்மானம்! தினேஷ் குணவர்தன எடுத்துள்ள நடவடிக்கை
srilanka
parliament
dinesh gunawardena
By Vasanth
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை (25) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் தீர்மானம் குறித்து அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிடுமா? என்று எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், இலங்கை வெளிநாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அரசியலமைப்பின் படி ஒரு உள்ளூர் பொறிமுறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.