தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு
sri lanka
shavendra silva
sports
By Shalini
டோக்கியோவில் இடம்பெறும் பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை படைத்து, தங்கப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவ சார்ஜன்ட் தரத்திலுள்ள தினேஷ் பிரியந்த, வொரன்ட் அதிகாரி 1 (warrant Officer 1) தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
முப்படைகளின் பிரதானியான ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் அவர் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
நாட்டுக்காக பெருமையை ஈட்டித்தந்ததை கௌரவிக்கும் வகையில் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.