உர மானியத்திற்கான பற்றுச்சீட்டுக்களை வழங்கும் நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாய்வு
புதிய கிராமம் - புதிய நாடு தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4)அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம ஒருங்கிணைப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், மேம்படுத்துவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து ஆராயப்பட்டதோடு பிரதான பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது, நெல் கொள் முதல் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் விவசாயிகளுக்குரிய உர மானியத்திற்கான பற்றுச்சீட்டுக்களை வழங்கும் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
உர மானியம்

உர மானியத்திற்கான பற்றுச்சீட்டுக்கள் உரிய காலத்தில் கிடைப்பதன் மூலமே விவசாய நெற் செய்கையை சிறப்பாக மேற்கொள்வதுடன் அதிக விளைச்சலையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, விமல வீர திஸாநாயக்க, டபிள்யூ. வீரசிங்க, எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், திலக் ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர். மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
