இராஜதந்திர சந்திப்பு திரைமறைவில் ஈழத்தமிழர் பிரச்சினை என்ற புறக்கணிப்பு...
இலங்கையின் இராஜதந்திர அரங்குகளிலும், பன்னாட்டு உச்சி மாநாடுகளிலும், பொருளாதார உதவி பேச்சுவார்த்தைகளிலும் கூட, ஈழத்தமிழர்களின் (ஈரத்மிழர்) அடிப்படைப் பிரச்சினை,புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் பறந்த அளவில் காணப்படுகிறது.
அதாவது, தமிழ் மக்களின் தாயக உரிமை, இன அழிப்பு குற்றங்களுக்கான நீதி, இராணுவ ஆக்கிரமிப்பு, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் சுயநிர்ணய உரிமை, திட்டமிட்டு மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது என்பதை இது அடிகோடிடுகிறது.
இலங்கை அரசு இதை “உள்நாட்டு பயங்கரவாதம்” அல்லது “மீள் நல்லிணக்கம்” என்ற சொல்லாடல்களுக்குள் அடக்கி, சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புகிறது என தமிழர் தரப்புக்கள் இன்றுத் வாதிடுகின்றன.
இதற்கு தமிழ் அரசியல் தலைமைகளின் உறுதியற்ற நிலைப்பாடுகளும் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும், தமிழ் பகுதிகளில் தொடரும் இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு மற்றும் தமிழ் அடையாள அழிப்பு போன்றவை, பெரும்பாலான இராஜதந்திர சந்திப்புகளில் “எலிபெண்ட் இன் தி ரூம்” (அறையில் இருக்கும் யானை) போல் மறைக்கப்பட்டே உள்ளன.
இந்த மௌனம், சர்வதேச சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுக்கும் இலங்கை அரசின் அழுத்தத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துவதாக கூறும் பின்னணியில் ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எழுத்தாளர் இரா.ஸ்ரீ.ஞானேஸ்வரனின் ஈழத்தமிழர் தொடர்பான கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |