பிள்ளையான கூறியதால் ரவிராஜை கொன்ற சம்பத் மனம்பேரி! மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், முன்னாள் காவல்துறை அதிகாரியான சம்பத் மனம்பேரி (Sampath Manamperi) முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட பின்னணியில் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இது குறித்த முக்கிய தகவல்களை சட்டத்தரணி மதிசுதன் ஜெயகிருஸ்ணன் வெளிப்படுத்தியுள்ளார்.
எமது ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், பிள்ளையான் குழுவும், கடற்படையும் இணைந்தே கொலையை செய்ததாக கூறப்படுவது குறித்து அவர் விவரித்துள்ளார்.
மேலும், இந்த கொலையின் சூத்திரிரதாரிகளாக பிள்ளையானின் சகாக்களும் உள்ளடங்குவதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முக்கிய சாட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொடரும் காணொளியில் சுட்டிக்காட்டியுள்ளார்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |