மோடிக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி
அண்மையில் மாலைத்தீவுக்கு இந்திய பிரதமர் மோடி மேற்கொண்ட விஜயமானது அவருக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்று அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும் இந்த விடயங்கள் சீனாவின் மாலைத்தீவு மீதான நிலைப்பாட்டுக்கு சாதகமானதா என்பது கேள்விக்குறியே
இது சீன ஊடகங்களை கடுமையாக பாதித்திருக்கும் விடயமாக இருந்திருக்கலாம்.
இந்நிலையில் சீன ஆதரவு ஊடகமான குளோபல் டைம்ஸ், மோடியின் மாலைத்தீவு விஜயம் குறித்து வெளிப்படுத்திய பகுப்பாய்வு அறிக்கை பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியிருந்தது.
சீனாவின் செல்வாக்கு
இது தொடர்பில் இலங்கையின் அரசியல் அவதானிகளும் விளக்கமளித்துள்ளனர். மேலும் தென்னிலங்கை ஊடகங்களும் இதனை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை மாலைத்தீவுக்கு விஜயம் செய்தபோது, 565 மில்லியன் டொலர் கடன் உதவியை அறிவித்திருந்தார்.
இது சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு முக்கிய ஆரம்பமாக அமைந்திருந்தது.
மாலைத்தீவில் உள்ள சீனாவின் செல்வாக்கை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததற்கான ஒரு நிரூபணமாக மோடியின் விஜயத்தை சில இந்திய ஊடகங்கள் விளக்கியுள்ளன.
எனினும், சீன தரப்புகள் இத்தகைய வார்த்தை பிரயோகங்களை விமர்சித்துள்ளனர்.
இந்தியா வெளியேறு
மாலைத்தீவு அதிபர் 'இந்தியா வெளியேறு' பிரசாரத்துடன் ஆட்சிக்கு வந்தார். இந்தியாவுக்கு எதிராக அவர் மேற்கொண்ட பிரசாரத்தின் காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் ஜனாதிபதியானவுடன், மாலைத்தீவு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அங்கிருந்து இந்தியப் படைகளை இந்தியாவுக்குத் திரும்பப் பெறுமாறு மோடியிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாரம்பரியமாக, மாலைத்தீவு அதிபர்கள் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தருவார்கள். முய்சு சீனாவிற்கு விஜயம் செய்தார்.
இதை இந்தியாவுக்கு ஒரு அறைகூவலாக இந்தியா கருதியது.
மாலைத்தீவு அதிபருக்கு மோடி பாடம் புகட்டுவார் என்று இந்திய ஊடகங்கள் கூறியிருந்தன, ஆனால் மோடி பொறுமையாக இருந்து, இந்தியர்கள் மாலைத்தீவுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதைத் தவிர, அவர் கடுமையாக எதிர்வினையாற்றவில்லை என இந்திய ஊடகங்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளன.
இறுதியாக, மாலைத்தீவு பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க மோடியின் உதவியை நாட மாலைத்தீவு அதிபர் இந்தியா சென்றார்.
மோடியின் உதவி
மோடியும் பழைய வெறுப்பை மறந்து அவருக்கு உதவினார். இந்நிலையில் அண்மையில் மாலைத்தீவு அதிபர் மோடியை அந்நாட்டு சுதந்திர தின விழாவிற்கு அழைத்தார்.
மோடியின் விஜயம் முடிவடைந்த நிலையில், இலங்கை அதிபர் அநுரகுமார, மாலைத்தீவுக்கு தற்போது சென்றுள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு வலுவான இந்திய எதிர்ப்புக் கொள்கையையும் காட்டிய தற்போதைய சிறிலங்கா அரசாங்கம், அநுரவின் முதல் இந்திய வெளிநாட்டு விஜயத்தினாலும், மோடியின் இலங்கை வருகையினாலும் மாற்றியமைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
